இடுகைகள்

இளந்தலைமுறையினரை உருவாக்குவதில் இன்றைய சபையின் பங்கு

  கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,   நமக்கு முன்பாகப் புறப்பட்டு,  'முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலினால் நம்மை எழுப்புகிறவரும்"  (2 சாமு. 5:24), 'நீ எங்கே இருக்கிறாய்?" (ஆதி. 3:9) என்றும், 'இங்கே உனக்கு என்ன காரியம்?" என்றும் (1 இராஜா. 19:9), 'நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?" என்றும் நமது இருப்பிடங்களை உணரச் செய்கிறவரும், நமது நடைகளை அவரது வழிகளில் ஸ்திரப்படுத்துகிறவரும் (சங். 17:5), நமது ஆத்துமாவை மரணத்துக்கும், நமது கால்களை இடறுதலுக்கும் தப்புவிக்கிறவருமாகிய (சங். 56:13) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்!  'சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற" அவருக்குள் நம்மை பரிபூரணமுள்ளவர்களாகப் பாதுகாத்துவருகின்ற  தேவனுக்கே (கொலோ. 2:10) எல்லா துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக! பிரியமானவர்களே! கிருபையினாலே ஆயுசுநாட்களை அவர் நமக்குக் கூட்டிக்கொடுத்தாலும்,  காரணங்களுடனேயே அவைகள் நமக்கு நீட்டித்தரப்படுகின்றன  என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளின் தொடக்கத்தி...

உருவாக்கப்படும் தலைவர்கள் - 14

தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 14   உருவாக்கப்படும் தலைவர்கள்  இவ்வுலகத்தில் எழும்பும் தலைவர்களை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம். முதல் வகை தலைவர்களாக உருவாகும் கூட்டம், இரண்டாவது வகை தலைவர்களாக உருவாக்கப்படும் கூட்டம். இவ்விரண்டிற்கும் வித்தியாசங்கள் என்று சொல்லுவதற்கு அதிகமில்லையென்றாலும், வித்தியாசங்கள் ஒன்றுமே இல்லை என்று நாம் உடனடியாக சொல்லிவிட முடியாது. உருவாக்கபடும் தலைவர்களோ அல்லது உருவாகும் தலைவர்களோ இவ்விரண்டு தலைவர்கள் கூட்டங்களும் வேதத்தை தங்கள் மாதிரியாக மாற்றிக்கொண்டு தங்கள் பயணத்தை தொடருவார்களென்றால் இருவருடைய தலைமைத்துவங்களும் நிச்சயம் வெற்றியுள்ளதாகவே இருக்கும்.  வேதத்தை தங்கள் மாதியாக வைத்துக்கொண்டு உருவான பல தலைவர்களுக்கு, தங்களைப் போன்ற பல தலைவர்களை உருவாக்கவேண்டும் என்கிற மிகப்பெரிய சவால் உண்டு. கிறிஸ்துவின் அன்பை ருசித்த ஒவ்வொருவனும் தன்னை தலைவனாக மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் உண்டு. தாங்கள் மாத்திரம் கிறிஸ்துவின் அன்பினை ருசித்தால்; போதாது தன்னைச் சுற்றியுள்ள கூட்டத்தினரும் அவ்வன்பைக் காணவேண்டுமே என்ற ஆவல் ஒருவனுக்குள் உருவாகுமானால், ...

தவறுகளை மறைக்கும் தலைவர்கள் - 13

தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 13   தவறுகளை மறைக்கும் தலைவர்கள்  மோசேயின் செய்த காரியத்தில் புதைந்துள்ள மற்ற காரியங்களையும் நாம் காணத் தவறக்கூடாது. மோசே தன் சகோதரனை அடித்த எகிப்தியனை கொலைசெய்ததோடு மாத்தரமல்லாமல், தான் செய்த அந்த காரியத்தை மறைத்துவிடவேண்டும் என்றும் நினைத்தான். தவறு செய்யத் துணிந்த மோசேயின் மனம் அந்த தவற்றை மறைக்கவும் முனைந்து நின்றது, தவறுகளை மறைப்பது தலைவர்களுக்கு அழகல்லவே. இந்த குணம் காணப்படுமாயின் தலைமைத்துவத்தில் ஒரு தலைவன் நிச்சயம் நிலைத்துநிற்கமுடியாது. பாவஞ் செய்யாத மனிதன் இந்தப் பூமியில் இல்லையே! சாதாரண விசுவாசியாயிருந்தாலும், மிகப்பெரிய தலைவனாக இருந்;தாலும் எதாவது சில விஷயங்களில் தவறுவது மனித இயற்கையே; பாவங்களில் அல்ல. என்றாலும் தான் செய்த காரியம் தவறு என்று தன் மனதே தன்னை வாதிக்கும் போது, அதனைச் சரிப்படுத்த முடியாமல், வெளிமக்களோடும் அதனைக்குறித்து ஆலோசனை கேட்க இயலாமல் அதனை மறைத்துவிடவேண்டும் என்ற மனப்பாங்கே அநேகரிடம் காணப்டுகின்றது. இப்படிப்பட்டோர்  தலைவராயிருப்பது எப்படி? மற்றொரு கூட்டத்தினர், தான் தவறு செய்தாலும், அது வேதத்திற...

தலைவனின் தனிமைப் பயணம் - 12

தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 12  தலைவனின் தனிமைப் பயணம்   தலைவனின் வாழ்க்கையிலும், ஊழியத்தின் காரியங்களிலும் தனிமை என்பது தவிர்க்;க முடியாத ஒன்று. தலைவனாகும் மனிதன் தானறியாமலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளுகிறான். ஒருபுறத்தில் இது அவசியமானதுதான் என்றாலும், மற்றொருபுறத்தில் இதில் மறைந்து கிடக்கும் ஆபத்துக்களையும் தலைவர்கள் காணத் தவறிவிடக்கூடாது. அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கையைப் பாதுகாக்கும், உற்சாகப்படுத்தும் மேய்ப்பர்களாக அவர்கள் காணப்பட்டாலும், தலைவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் மிகப்பெரிய பொறுப்புக்குள்ளாகத் தள்ளப்படுகின்றனர். சபைக்கு வரும் விசுவாசிகளையோ, தன்னைப் பின்பற்றும் மற்ற மக்களையோ அநேக காரியங்களில் கேள்விகேட்டு அவர்களுக்கு ஆலோசனை அளிக்கலாம், ஆனால், தலைவர்களுக்கு ஆலோசனை கிடைப்பது எங்கே? தேவ சந்நிதி மட்டுந்தானா? தலைமைத்துவமே தலைவர்களைத் தனிமைப்படுத்துகின்றது. இப்படி தலைவர்கள் தனிமைப்படுத்தப்படும்போது, தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக்குறித்து அதிக கவனமாயிருக்வேண்டியது அவசியம். தனிமை என்ற பாதையில் தலைவர்கள் நுழைந்து செல்லும்போது, அது அவ...

தலைவனின் அருமை பொறுமையிலேயே - 11

தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 11 தலைவனின் அருமை  பொறுமையிலேயே தலைமைத்துவத்தில் பயணத்தில் முக்கியமானது தேவஞானம் மாத்திரமல்ல, தேவகுணமுமே. கிறிஸ்துவுடனேகூட தன்னை சிலுவையில் அறைந்துகொள்ளாத தலைவர்களின் தலைமைத்துவம் அநேகரை சிலுவையில் அறைந்துவிடும். எதிரிகள் மனந்திரும்பவேண்டும் என்ன சிந்தைக்கு பதிலாக, எதிரிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற பண்பே உயர்ந்துநிற்கும். இன்றைக்கும் தங்களை எதிர்க்கும் மக்கள் கிறிஸ்துவண்டை வருவதற்காக ஜெபிக்காமல், அவர்கள் அழிந்துபோகவேண்டும் என்கிற மனப்பாங்குடனே ஜெபிக்கும் தலைவர்கள் உண்டே. இது கிறிஸ்துவின் சிந்தையல்லவே. அவர் சிலுவையின் மரணபரியந்தமும் தன்னைத் தானே தாழ்த்தினார் என்றே வேதத்தில் காண்கிறோம். தன்னை காட்டிக்கொடுக்கும்படியாக வந்த தன்னுடைய சீஷனாகிய யூதாஸ் காரியோத்தைப் பார்த்ததும் கெத்சமனேயில் கூட கிறிஸ்துவுக்கு மனதுருக்கம் வந்ததே, அவனை சிநேகிதனே என்றே அழைத்தது உயர்ந்து நிற்கும் கிறிஸ்துவின் தலைமைத்துவத்திற்கு எத்தனை ஆணித்தரமான சான்று. சிலுவையில் அவர் தொங்கிக்கொண்டிருக்கும்போது கூட தன்னை அறைந்தவர்களுக்கும், தனக்கு விரோதமாய் கூச்சலிடும் மக்களுக்கும...

நல்ல மேய்ப்பன் -10

தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 10  நல்ல மேய்ப்பன் நானே நல்ல மேய்ப்பன். ஆடுகளுக்காகத்  தன் ஜீவனை கொடுக்கிறான்.  யோவான் 10:11 நமக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்திலும் மற்றும் ஜனத்தின் மீதும் நாம்  எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம்; நம்முடைய குணங்கள் எப்படிப்பட்டவைகளாயிருக்கிறது என்பதை சற்று ஆராய்ந்து அறிந்திருந்தால் நமது தலைமைத்துவம் மேலும் வலுப்படும். எதற்காக நாம் அழைக்கப்பட்டோம்? எத்திட்டத்தைச் செய்துமுடிக்க நாம் உடன்பட்டோம்? என்ற தரிசனம் கலந்த உணர்வு நமது ஊழியத்தின் ஒவ்வொரு துடிப்புகளிலும் வெளிப்படவேண்டும். எனவே பவுல், 'ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை' (2பேதுரு 1:10) என்று எழுதுகின்றார். மேலும் 'அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்வேண்டும்' (எபேசியர் 4:1) என்றும் பவுல் எழுதுகின்றார். ஆவிக்குரிய உன்னத நிலையில் ஏறியமர்ந்து, இளைப்படைந்து வீழ்ந்த பல மாந்தர்களின் தடுமாற்றங்களுக்குக் காரணம் அழைப்பை மறந்துபோனதே; இலட்சியத்தை மற...

பெலனற்ற தலைவர்கள் - 9

தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 9 பெலனற்ற தலைவர்கள்  மோசே தனது முயற்;சியினால் தலைவனாக முற்பட்டபோது, அது அவனது வாழ்க்கையில் மிகப்பெரிய ஆபத்தினைக் கெர்ண்டுவந்தது. தலைவனாக முற்பட்ட அவனுக்குள், தலைமைத்துவத்தின் எதிரியான பயம் புதைந்திருந்ததை அப்போது அவனில் காணமுடிந்தது. தான் செய்த காரியம் பார்வோனுக்கு தெரிந்துவிட்டால், தனது உயிருக்கு ஆபத்து என்று அவன் பயப்பட்டான். எதிரியைக் குறித்த பயம் மனதில் நிறைந்திருந்தால், அவன் தலைவனாவது எப்படி? பார்வோனின் கைகளிலிருந்து இஸ்ரவேல் மக்களை விடுவிக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவனுக்கு முன்பாக காணப்பட்டபோதும், அவனோ பார்வோனுக்கு பயப்படுகிறவனாகவே காணப்டுகின்றான்.  சவுலின் நிலையும் இப்படியே காணப்பட்டது. பெலிஸ்தியரின் சேனையிலுள்ள கோலியாத் முன்னே வந்து நின்றபோது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் தடுமாறுகின்றான். அவன் தலைவனல்ல என்பது எதிரி வந்தவுடன் நிரூபனமாயிற்று. ஜனங்களுக்குத் தலைவன், ஆனால் எதிரியின் முன்னோ தடுமாறுபவன்.  கோலியாத்தின் முன்பாக சவுலின் பயம் அவனை உறையப்பண்ணிவிட்டது. மக்களைக் காப்பாற்றவேண்டிய ராஜா, மக்களுக்காக யுத்தத்தில் போரி...