Posts

Showing posts from May, 2023

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3

தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 3 நம்முடைய ஓட்டமல்ல,  தேவனுடைய ஓட்டம் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைத்ததும், நாம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமானதோர் சத்தியம், 'நாம் நமக்காக அல்ல, பரலோகத்தில் வீற்றிருக்கும் பிதாவுக்காகவே ஓடத் தொடங்கியிருக்கின்றோம்' என்பதே.  ஊழியத்தின் பாதையிலும், நமது ஓட்டத்தைத் தொடங்கும் முன் எழுதப்படவேண்டிய ஆரம்ப வரிகளும் இவைகளே. சிலுவையில் இயேசு  கிறிஸ்து செய்து முடித்த பிதாவின் சித்தத்திற்குள் பொதிந்திருக்கும் இந்த இரகசியத்தை எக்காரணத்தைக் கொண்டும் நம்முடைய சிந்தையிலிருந்து நாம் சிதறச் செய்துவிடக்கூடாது. எத்தனையோ வியாதியஸ்தகளை குணமாக்கியபோதிலும், திரளான ஜனங்களுக்கு அற்புதங்களைச் செய்திருந்தபோதிலும், பிதாவின் வார்த்தைகளை தன்னைத் தேடிவரும் ஜனங்களுக்கு உபதேசித்திருந்தபோதிலும்,  அநேகரை போஷித்திருந்தபோதிலும், பலருடைய வாழ்க்கையில் காணப்பட்ட குறைவுகளை நிறைவாக்கியிருந்தபோதிலும், மக்களாலேயே மதிக்கப்படாமலிருந்த மனிதர்களை கரங்களால் தொட்டு சுகமாக்கியிருந்தபோதிலும், பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த ஜனங்களை கட்டுகளிலிருந்து விடுதலையாக்கினபோத

மனிதனானாலும், மண்ணே! - 2

Image
தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 2  வேகமாக ஓடும் வாழ்க்கை தலைவர்களாகிய நாம் தேவன் நம்மை பயன்படுத்தும் வழிகளில் சந்தோஷித்திருந்தாலும், ஆனந்தத்தினால் அனுதினமும் நிறைந்திருந்தாலும்,  அழைப்பின் மையத்திலேயே இருந்து நாம் பணி செய்துகொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றிலும் எங்கும் ஆர்ப்பரிப்பின் சத்தங்கள் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேயிருந்தாலும், நம்முடைய வாழ்க்கையிலிருந்து நாம் விடைபெறும் நாள் இப்பூமியில் நெருங்கும்போது, தேவனால் நமக்குக் குறிக்கப்பட்ட காலம் இத்தரையில் நிறைவடையும்போது, அவர் தெரிந்தெடுக்கும் மனிதர்களிடத்தில் தயாள மனதுடன் அதனை அளித்துவிட நாம் எப்பொழுதும் தயாராகவும் இருக்கவேண்டும் என்பதே வேதம் தரும் போதனை.  ஆதிப் பிதாக்களாகிய ஆதாமும், ஏவாளும் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமற்போனபோது, இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்