Posts

Showing posts from April, 2023

வெற்றியா? வெற்றிடமா? - 1

Image
தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 1 வெற்றியா? வெற்றிடமா? தன்னை மட்டுமே முக்கியப்படுத்தி, சுற்றியிருப்பதெல்லாவற்றையும் மக்கிப்போகச் செய்து, வாழ்க்கையின் விளிம்பைத் தொடும்போதுகூட தன்னிடத்திலிருப்பதை எவரிடத்திலும் எடுத்துக்கொடுக்கும் மனதற்றவர்களாகவே மரித்துப்போகும் மனிதர்கள் இவ்வுலகத்தில் ஏராளம் ஏராளம். நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா? (மத் 20:15) என்ற வசனத்தின்படி, தயாளமாய், தாராளமாய் மனமுவந்து தேவன் தன்னிடத்தில் அள்ளிக் கொடுத்தவைகளை, மற்றவர்களிடத்தில் ஒப்புவிக்கும்போது, அதே தயாள குணத்தோடும், தாராளமான மனதோடும் ஒப்புவிக்க மனதற்றவர்களாகவும், கிள்ளிகூடக் கொடுக்கும் குணமற்றவர்களாகவும் நின்றுகொண்டிருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை இன்றைய நாட்களில் மிகுதியே. என்னைப் போன்றதோர் மனிதன் இனி தேவனால் தெரிந்துகொள்ளப்படப்போவதில்லை, என்னைப்போல இன்னொரு மனிதனை தேவன் ஆயத்தப்படுத்தப்போவதில்லை, எனக்கே எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, என்னைப் போல தாலந்துகள் நிறைந்த தலைவன் உருவாவது கடினமே, என்னைப் போன்ற சிலரது சிரசுகளில் மாத்திரமே இத்தகைய கர்த்தரின் அபிஷேகம் தங்கியிருக்கின்றத

முன்னுரை

 முன்னுரை பரிசுத்தத்திற்கென்றும், பரலோகத்திற்கென்றும் அழைத்து நம்மை முன்குறித்திருக்கின்ற தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்;த்துக்கள். வாலிபர்கள் மத்தியில் வாலிபராய் நாம் ஆற்றும் பணி வளரும் தலைமுறையினரைத் தலைவர்களாக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், தேவனின் நாமத்தில், தேவனைச் சுமந்தவர்களாய், தேசத்திற்குள் புகுந்து சத்துருவின் கரத்திலுள்ள நம் சகோதரரை மீட்கும் பணியில், தகுதியுள்ள தலைவர்களாக நாம் எப்படி செயலாற்றவேண்டும் என்பதை தொடர்ச்சியாக எழுத விரும்புகின்றேன்.  'கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை' (1தீமோ. 3:1) என்பதே தலைமைத்துவத்தைக் குறித்து பவுல் கொடுக்கும் முதல் அறிக்கை .  என்றபோதிலும், அதைத் தொடர்ந்து, கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும் என்றும், அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிரு