சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4
தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 4 சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4 தலைமைத்துவம் என்பது, தங்கள் சுமைகளை எளிதாக்கிக்கொள்வது அல்ல; மாறாக, சுமப்பதற்கரிதான சுமைகளுக்காகவும் தங்கள் தோள்களை ஆயத்தப்படுத்திக்கொள்வது. தலைமைத்துவம் என்பது தங்களுடைய சுமைகளையும் மற்றவர்களின் தோள்களின் மேல் இறக்கிவைப்பதல்ல; மாறாக, மற்றவர்களுடைய சுமைகளையும் தங்கள் தோள்களின் மேலே ஏற்றிக்கொள்வது. புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன் (மத். 20:25-27) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் போதனை. 'நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது' (அப். 20:34) என்பதுதானே அப்போஸ்...